shadow

முதல் பெங்காலி பிரதமர் ஆவார் மம்தா: பாஜக தலைவர்

மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய அம்மாநில பா.ஜனதா தலைவர் திலிப் கோஷ், ‘‘திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பிரதமராக நல்ல வாய்ப்புள்ளதாகவும், அவர் நாட்டின் முதல் பெங்காலி பிரதமர் என்ற பெருமையை பெறுவார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் மம்தாவின் வெற்றியை பொருத்தே மேற்கு வங்கத்தின் தலைவிதி உள்ளதாகவும், ஜோதிபாசுவை முதல் பெங்காலி பிரதமராக எங்களால் ஆக்க முடியவில்லை என்றும் ஏனென்றால், அவரின் கட்சி அவரை பிரதமராக விடவில்லை என்றும், முதல் பெங்காலி ஜனாதிபதி என்ற பெருமையை பிரணாப் முகர்ஜி பெற்று விட்டார். அதனால் இது பெங்காலி பிரதமரை தேர்வு செய்வதற்கான நேரம் என்றும் திலிப் கோஷ் கூறினார்.

மேற்கு வங்கத்தில் மம்தாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர பா.ஜனதா கடுமையாக போராடி வருகிறது. இந்நிலையில் மம்தாவை பிரதமராக ஆக்குவது தொடர்பாக பா.ஜனதா தலைவர் பேசியிருப்பது அக்கட்சியில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply