முதல்வர் வெளிநாடு செல்வதன் உண்மையான காரணம் என்ன? முக ஸ்டாலின்

முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்டுள்ள வெளிநாடு பயணத்தின் உண்மையான காரணங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் வெளிப்படையாக மேற்கொள்ளும் வெளிநாடு பயணத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கும் முதல்வர், தனது பயணம் பற்றி விளக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்லும் மர்மம் என்ன? அப்போது நீங்கள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. சொந்த விஷயத்திற்காக அவர் வெளிநாடு செல்வதாக சொல்கிறார். அந்தச் சொந்த விஷயம் என்ன? அதை அவர் தெளிவுபடுத்தவில்லை. ஆனால் நான் வெளிநாடு செல்வதை ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசுகிறார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply