shadow

முதல்வர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்வர் வீட்டில் வெடிக்குண்டு நிபுணர்கள், மோப்ப நாய் கொண்டு சோதனை செய்தனர். அவ்வாறு சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என தெரியவந்தது

வெடிக்குண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர்கள் கமலஹாசன், விஜயகாந்த், தனுஷ் ஆகியோர் வீடுகளுக்கு கடந்த ஆண்டுகளில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.