shadow

முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு 2 எம்பிக்கள் ஆதரவு


தமிழக முதல்வர் ஒபிஎஸ் அணி நாளுக்கு நாள் வலுவாகி வரும் நிலையில் சற்று முன்னர் இரண்டு அதிமுக எம்பிக்கள் அவருக்கு தங்களுடைய முழு ஆதரவை வழங்கியுள்ளனர்.

நாமக்கல் தொகுதி எம்பி பிஆர் சுந்தரம், கிருஷ்ணகிரி எம்பி அசோக்குமார் ஓபிஎஸ்க்கு ஆகிய இருவரும் தங்களது ஆதரவை ஓ.பன்னீர் செல்வத்திற்கு தந்துள்ளதால் ஓபிஎஸ் கை வலுத்துள்ளது.

மேலும் இன்னும் ஒருசில எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் இருந்து ஓபிஎஸ் அவர்களை தொடர்பு கொண்டு ஆதரவு தர தயாராக இருப்பதாக கூறியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் ஓபிஎஸ் அணியினர் உற்சாகமாக உள்ளனர்.

Leave a Reply