shadow

முக்கிய துறைமுகங்களில் 160 மெகாவாட் மின்னுற்பத்தி திட்டங்கள்

portநாட்டிலுள்ள முக்கிய துறைமுகங் களில் 2017 ஆம் ஆண்டுக்குள் 160 மெகாவாட் அளவுக்கு புதுப் பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ரூ.408 கோடி மதிப்பீட்டில் நாட் டிலுள்ள முக்கிய துறைமுகங் களில் சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலை மூலம் 160.64 மெகா வாட் மின்னுற்பதி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களை கப்பல்துறை அமைச்சகம் மேற் கொண்டு வருகிறது. அனைத்து முக்கிய துறைமுகங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக கப்பல்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் முக்கிய 12 துறைமுகங்களில் 90.64 மெகா வாட் அளவுக்கு சூரிய மின்னுற் பத்தி திட்டமும், 4 முக்கிய துறை முகங்களில் 70 மெகாவாட் அள வுக்கு காற்றாலை மின்னுற்பத்தி செய்யவும் இலக்கு வைக்கப் பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

இந்த துறைமுகங்களில் மாற்று மின்னுற்பத்தி திட்டங்களை தொடங்குவதற்கான வேலை களை நடந்து வருகின்றன. இந்த துறைமுகங்கள் தங்களது லாப வருமானத்திலிருந்து இந்த திட் டங்களை தொடங்குகின்றன. இந்த திட்டங்களுக்கான செலவுத் தொகை 407.70 கோடி ரூபா யாகும். காண்ட்லா, வா.உ.சிதம்பர னார் மற்றும் காமராஜர் துறை முகங்கள் காற்றாலை மின்னுற் பத்தியில் ஈடுபடும். இதன் மூலம் 70 மெகா வாட் மின்னுற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே 6.94 மெகாவாட் மின்னுற்பத்திக்கான திட்டம் விசாகபட்டினம் துறைமுகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6.25 மெகாவாட் வரை உற்பத்தி நடந்து வருகிறது.

சோலார் மூலமாக கொல் கத்தா, வ.உ.சிதம்பரனார், மங்க ளூர் மற்றும் மும்பை துறைமுகங் களில் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டங்கள் படிப்படியாக 2017 ஆம் ஆண்டுக்குள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மின்சார கொள்முதலுக்கான செலவுகளை குறைக்க முடியும் என்றும்,மின் உற்பத்திக்காக புதுப் பிக்கத்தக்க சக்திகளை பயன் படுத்த முடியும் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது

Leave a Reply