முகேஷ் அம்பானி மகன் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் பட்டியல்

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி – ஷ்லோக்கா மேத்தா திருமணம் இன்றும் நாளையும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த திருமணத்தில் கலந்து கொண்ட இந்திய பிரபலங்கள் மற்றும் உலக பிரபலங்கள் குறித்த தகவல்களிஅ பார்ப்போம்

இந்த திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், சல்மான்கான், ரன்வீர்சிங், போன்ற நடிகர்களும், முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான் கி மூன் மற்றும் அவரது மனைவி, முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளேயர் அவரது மனைவி செரி ப்ளேயர், கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை அவருடைய மனைவி அஞ்சலி பிச்சை போன்ற உலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

மேலும், சாம்சங் துணைத் தலைவர் லீ, பெல்ஜிய அரசியல் தலைவர் வெரோனிக் கெப்பர், நெட்ஃபிளிக்ஸ் துணை நிறுவனர் ரீட் ஹாஸ்டிங்க்ஸ், சவுதி எண்ணெய் வளத்துறை அமைச்சர் காலித் அல் ஃபலி, கோககோலா சிஇஓ ஜேம்ஸ் கின்ஸி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கிறிஸ்டோஃபர் கெப்பர், போன்றவர்களும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவருடைய மனைவி அஞ்சலி ஆகியோர் உள்பட பல கிரிக்கெட் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply