மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விழா: மதுரையில் கோலாகலம்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. இந்த திருமண வைபவத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்ட விழா நாளையும், கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு நாளை மறுநாளும் நடைபெறுகிறது

நாளை தேர்தல் நாளாக இருந்தும் தேரோட்ட திருவிழாவிற்கு வழக்கம்போல் கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மதுரை தொகுதியில் மட்டும் நாளை இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

Leave a Reply