மீண்டும் சாம்பியன் ஆகுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

2010, 2011, 2018 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறையும் சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகப்பெரிய பலமே கேப்டன் டோனிதான். தனது சிறப்பான ஆட்டத்திலும், கேப்டன் பதவியிலும் சிறப்பாக செயல்பட்டு அணியின் முதுகெலும்பாக உள்ளார். கீப்பிங், கேப்டன்ஷிப், பேட்டிங், நெருக்கடியான நேரத்திலும் நிதானமாக முடிவெடுக்கும் திறன், நீண்ட அனுபவம் ஆகியவை தோனியின் சிறப்புகள். இதனால் இறுதி வரை நிச்சயம் சிஎஸ்கே செல்லும் என்றும், அணிக்கு மீண்டும் ஒருமுறை கோப்பையை தோனி பெற்று தருவார் என்றும் நம்பப்படுகிறது.

மேலும் சென்னை அணியின் ஆல்ரவுண்டர்கள் பிராவோ, ஜடேஜா, வாட்சன் ஆகியோர் பேட்டிங், ஹர்பஜன் உள்பட சிஎஸ்கே பந்துவீச்சாளர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். இவை அனைத்தையும் விட பெரும்பாலான ரசிகர்களின் ஆதரவும் சிஎஸ்கே அணிக்கு இருப்பது மிகப்பெரிய பலம்

Leave a Reply