shadow

மீண்டும் ஒரே மாதத்தில் 2 படங்கள்: நயன்தாரா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா மற்றும் ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய இரண்டு படங்களும் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளீயாகி இரண்டும் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதமும் அவர் நடித்த இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது.

தல அஜித்துடன் நயன்தாரா நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் வரும் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது தெரிந்ததே. படக்குழுவினர்களும் இதனை உறுதி செய்தனர். இந்த நிலையில் அதே ஜனவரி மாதம் அவர் நடித்த இன்னொரு திரைப்படமான ‘கொலையுதிர்காலம்’ வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சென்சாருக்கு பின் இந்த படத்தின் சரியான ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது.

கமல்ஹாசனின் ‘உன்னை போல் ஒருவன்’ படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கியுள்ள இந்த த்ரில் படத்திற்கு இளம் இசைஞானி யுவன்ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். மேலும் இவரே இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply