மீண்டும் அஜித் படத்தை தயாரிப்பேன்: சத்யஜோதி தியாகராஜன்

அஜித் நடித்த ‘விவேகம்’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனர் தியாகராஜன் மீண்டும் அஜித் படத்தை விரைவில் தயாரிப்பேன் என்று கூறியுள்ளார்.

அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் வெளியாகி 100 நாட்கள் ஆகிவிட்டதை அடுத்து அஜித், நயன்தாரா, சிவா உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி கூறிய தியாகராஜன், மீண்டும் அஜித் படத்தை தயாரிக்க முயற்சி செய்வேன் என்றும் தனது முயற்சி விரைவில் பலிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

சத்யஜோதி நிறுவனம் தற்போது தனுஷ் நடிக்கும் படம் ஒன்றை தயாரித்து வருகிறது என்றும், இன்னொரு தனுஷ் படத்தையும் இந்நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply