‘மிஸ்டர் லோக்கல்’ ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு?

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கிய ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி மேலும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் இன்று பதிவு செய்துள்ள டுவீட்டில் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல், ‘மே ரிலீஸ்’ என்று மட்டும் கூறப்பட்டிருப்பதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, சதீஷ், ஆர்ஜே பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், ஆனந்த்பாபு, சுமன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் கார்த்தி, ஆர்யா, ஜீவா, உதயநிதி மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோர் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர். ராஜேஷ் எம் இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

Leave a Reply