மிஷ்கின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

மிஷ்கின் இயக்கி வரும் ‘சைக்கோ’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் அவர் நடித்து வந்த ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ என்ற படமும் தற்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இதனையடுத்து இந்த படம் தற்போது தணிக்கை சான்றிதழை பெற்றுள்ளது

தணிக்கை அதிகாரிகள் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மிஷ்கின் நடிப்பில் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவான ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ திரைப்படத்தில் அதுல்யாரவி, சுசீந்திரன், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். சுஜித் சராங் ஒளிப்பதிவில் ராமராவ் படத்தொகுப்பில் உருவான இந்த படத்தை கல்பத்ரு பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது

தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது

Leave a Reply