மாஸ்டர் விஜய்யின் ஆட்டம் ஆரம்பம்: டுவிட்டரில் பரபரப்பு

விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் அப்டேட்டுக்கள் மிக விரைவில் வெளியாக இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மேலும் இந்த டுவிட்டில் ‘நண்பா நாம் ஆட்டத்தை ஆரம்பிச்சுடலாமா? என்று குறிப்பிடப்பட்டுள்ள கேள்விக்கு விஜய் ரசிகர்கள் வித்தியாசமான பதில்களைக் தெரிவித்து வருகின்றனர்

குறிப்பாக சமீபத்தில் நிகழ்ந்த வருமான வரி சோதனை மற்றும் மாஸ்டர் படத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்தும் விஜய் ரசிகர்கள் கருத்து சொல்லி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாஸ்டர் திரைப்படம் விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply