’மாஸ்டர்’ ஆடியோ விழாவிற்காக மாஸ் டிரைலர்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் ஆடியோ விழா வரும் 15ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது.

இந்த விழாவிற்கு படக்குழுவினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதும் விஜய் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ரசிகர்கள் ஏமாறாமல் இருக்க இந்த விழாவை நேரடியாக ஒளிபரப்ப சன்டிவி ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் ’மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழா குறித்த டிரைலர் ஒன்றை
சன் டிவி வெளியிட்டுள்ளது.

இந்த டிரைலரே மாஸ் ஆக இருப்பதாகவும், டிரைலரே இப்படி என்றால் ஆடியோ விழா அதைவிட மாஸ் ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதோ மாஸ்டர் ஆடியோ விழா குறித்த டிரைலர்

Leave a Reply