மாமியார் குளிப்பதை வீடியோ எடுத்த மருமகன்: அதிர்ச்சியில் டைவர்ஸ் செய்த மனைவி!

சிக்கிம் மாநிலத்தில் மாமியார் குளிப்பதை வீடியோ படமெடுத்த மருமகனை அவரது மனைவி அதிரடியாக டைவர்ஸ் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவருக்கும் 18 வயது பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இவர்களுடன் பெண்ணின் தாயாரும் சில நாட்கள் வசித்து வந்ததாக தெரிகிறது

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாமியார் குளிக்கும் போது ஜன்னல் வழியாக அவரது மருமகன் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. இதனை தற்செயலாக கண்டு பிடித்த அவரது மனைவி தனது தனது அம்மா குளிக்கும் போது வீடியோ படம் எடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக வழக்கறிஞரிடம் சென்று டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இன்னும் சில மாதங்களில் இருவருக்கும் டைவர்ஸ் கிடைத்துவிடும் என தெரிகிறது

மாமியார் மீது சபலப்பட்டு வீடியோ எடுத்து தன்னுடைய வாழ்க்கையையே தொலைத்து நிற்கும் வாலிபருக்கு தற்போது ஆறுதல் சொல்ல ஆள் இல்லை என்று தெரிகிறது

Leave a Reply