shadow

மாநில பெயர் மாற்றம்: மம்தா கோரிக்கையை மறுத்துவிட்டது மத்திய அரசு

மேற்குவங்க மாநிலத்தின் பெயரை பங்களா என்று மாற்ற வேண்டும் என்று மம்தாவின் அரசு விடுத்த கோரிக்கைக்கு மத்தியா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

பங்களா என்ற பெயர் அண்டை நாடான பங்களாதேஷ் போல் இருப்பதால் இந்த பெயர் நிராகரிக்கப்பட்டதாகவும் இதுகுறித்து மாநில அரசு அனுப்பிய கோப்புகள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன

இந்த நிலையில் மேற்குவங்க மாநிலத்தின் பெயரை பச்சிம்வங்கா என்று மாற்ற அம்மாநில பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மேற்கு வங்காள பாரதீய ஜனதா கட்சி தலைவர் திலீப் கோஷ் கருத்து தெரிவிக்கையில், “ மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டுமானால் பச்சிம்வங்கா என்றுதான் மாற்ற வேண்டும். வேறு பெயர் மாற்றினால் குழப்பமே மிஞ்சும்” என கூறியுள்ளார்.

 

Leave a Reply