shadow

மாநிலங்களவை வேட்பாளர்கள் யார் யார்? திமுக தலைவர் கருணாநிதி அறிவிப்பு
dmk
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிப்பு குறித்து அரசியல் கட்சிகள் முடிவு செய்து வருகின்றன.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு (திமுக), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்), ஏ.நவநீதகிருஷ்ணன், பால் மனோஜ் பாண்டியன், ஏ.டபிள்யூ. ரபி பெர்னார்ட் (அதிமுக) ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைவதை அடுத்து இதற்கான தேர்தல் ஜூன் 11-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், திமுக சார்பில் கழக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, கழகச் செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 134, திமுக கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தைப் பெற 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பதால் அதிமுக 3, திமுக 2 இடங்களில் எளிதாக வெற்றி பெறும். 6-வது இடத்தைப் பெறும் வாய்ப்பு அதிமுகவுக்கு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply