மாநாடு படத்தின் அட்டகாசமான பூஜை ஸ்டில்கள்: இணையத்தில் வைரல்
சிம்பு ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க உள்ளது என்பது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷமான செய்தியாகும்
இன்று காலை மாநாடு படத்தின் பூஜை மிக சிறப்பாக நடந்தது. இந்த பூஜையில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், வெங்கட்பிரபு, பாரதிராஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, கலைபுலி எஸ் தாணு உள்பட பலர் கலந்து கொண்டனர்
இன்று சிறப்பான பூஜை முடிந்தவுடன் ஒரு சில காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது இதனை அடுத்து நாளை முதல் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறவுள்ளது. இன்று நடைபெற்ற மாநாடு படத்தின் பூஜை போஸ்டர்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமின்றி மாநாடு குறித்த ஹேஷ்டேக் சிம்பு ரசிகர்களால் டிரெண்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்
Leave a Reply
You must be logged in to post a comment.