மாநகராட்சி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பேனர் விழுந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம் பெண் பலியான சம்பவம் நேற்றிலிருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணையின் முடிவில், ‘பணியில் கவனக்குறைவு போன்றவை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து அறிக்கை தேவை என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

மாநகராட்சி காவல்துறை கடமை தவறியதே சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணம் என்றும், உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் சுபஸ்ரீ உயிர் அநியாயமாக போயிருக்காது என்றும் கூறிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷாயி சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும், சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், நிவாரண தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

Leave a Reply