shadow

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏஜிஎஸ் புரோடக்சன் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாதவன் நடித்து இயக்கிய ’ராக்கெட்டரி’ என்ற திரைப் படத்தின் தமிழக திரையரங்கு ரிலீஸ் உரிமையை ஏஜிஎஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளது

மாதவன் ஜோடியாக சிம்ரன் நடித்திருக்கும் இந்த படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் உண்மையான வாழ்க்கை கதை என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது