shadow

மாணவர்களுக்கான செயலி

ணவர்கள் ஸ்மார்ட்போன்களைப் பொழுதுபோக்கு நோக்கில் மட்டும் பயன்படுத்துவதில்லை. கல்வி தொடர்பான பணிகளுக்கும் பயன்படுத்தலாம். இதற்கு உதவ எண்ணற்ற செயலிகள் இருக்கின்றன. இதில் டைம்டேபிள் செயலியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தச் செயலி வகுப்பு பாட அட்டவனையைக் குறித்து வைத்துக்கொண்டு, வகுப்புகளை மறக்காமல் இருக்க உதவுகிறது. இதில் வகுப்புகள் நடைபெறும் நேரத்தை குறிப்பிடுவதோடு, மாணவர்கள் தங்களுக்கு தரப்படும் வீட்டுப்பாடங்கள், விடுமுறை நாட்கள் போன்றவற்றையும் குறித்துக்கொள்ளலாம். வகுப்பில் எடுக்கும் குறிப்புகளையும் இதில் சேமிக்கலாம். முக்கியமாக வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போது போனில் அழைப்பு வந்தால், அதை மவுனமாக்கும் வசதியும் இருக்கிறது.

பள்ளி அல்லது கல்லூரி பாடத்திட்டங்களை நிர்வகிப்பதில் இந்தச் செயலி மிகவும் உதவியாக இருக்கும். எந்தச் சாதனத்திலிருந்து வேண்டுமானாலும் இதில் உள்ள தகவல்களை அணுகலாம்.

மேலும் தகவல்களுக்கு: //play.google.com/store/apps/details?id=com.gabrielittner.timetable&hl=en_GB

Leave a Reply