shadow

மழைக்கால நோய்கள் வராமல் தடுக்க என்ன செய்யவேண்டும்?

cold_2258686fநன்றாக கொதிக்கவைத்து ஆறிய நீரை மட்டும் பருகுங்கள். தண்ணீர் குறைந்தது ஐந்து நிமிடங்கள் நன்றாக கொதித்தால்தான் மஞ்சள் காமாலைக்கு காரணமான ‘ஹெப்படைட்டிஸ்– ஏ’ வைரஸ் போன்ற நுண்கிருமிகள் அழியும்.

* உணவுகளை நன்றாக வேகவைத்து ஆவி பறக்க சாப்பிடுங்கள்.

* உணவுகளை சுத்தமான பாத்திரங்களில் அடைத்துவைத்து பயன்படுத்துங்கள்.

* பழங்கள், காய்கறிகளை நன்றாக கழுவவேண்டும். சுடுநீரில் ஒன்றுக்கு இருமுறை கழுவி பயன்படுத்துங்கள்.

* பழைய உணவுகள், திறந்துவைத்த உணவுகள், ஐஸ் சேர்த்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

* சாப்பிடும் முன்பு கைகளை நன்றாக சோப்பிட்டு கழுவுங்கள்.

* கழிப்பறைக்கு சென்ற பிறகு கை, கால்களை சோப்பிட்டு கழுவுங்கள்.

* சாலை ஓர உணவுகளை தவிர்த்திடுங்கள். குறிப்பிட்ட காலம் வரை அசைவ உணவுகளையும் தவிர்க்கலாம்.

* தும்மும்போது, இருமும்போது டவலால் மூக்கையும், வாயையும் மூடிக்கொள்ளுங்கள்.

* கொசுக்கள் உற்பத்தியாக எந்த வாய்ப்பினையும் உருவாக்கி கொடுத்துவிடாதீர்கள். முட்டை, லார்வா, பியூப்பா போன்ற மூன்று கட்டங்களாக கொசு நீரில்தான் வளரும். வளர்ச்சியடைந்த கொசுவே மனிதர்களை தாக்க வெளியேவரும். அதனால் வீட்டை சுற்றி கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். பிளிச்சிங் பவுடர் பயன்படுத்துங்கள்.

* கொசுக்களை பற்றி பலரும் இரவில் மட்டுமே கவலைப்படுகிறார்கள். காலை நேரங்களில் தாக்கும் கொசுக்கள் அபாயகரமானவை என்பதை நினைவில் வைத்திருங்கள்.

* மழைக்கால நோய்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள், சர்க்கரை நோயாளிகள், முதியோர்களை அதிகம் பாதிக்கும்.

அவர்களுக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டால் உடனடியாக முறையான சிகிச்சைகளை மேற்கொள்ளுங்கள்.

* மழைக்கால நோய்களில் இருந்து முழுமையாக தப்பிக்க குடும்ப மருத்துவரின் முழுமையான ஆலோசனைகளை பெறுங்கள்.

Leave a Reply