shadow

மறுவடிவம் பெற்றுள்ள நோக்கியா 3310-ன் புதிய அம்சங்கள்

நோக்கியா 3310 போன் மீண்டும் மறுவடிவம் பெற்று வரப்போவதை அந்நிறுவனம் ஞாயிறன்று உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு வெளியிடப்பட்டு அதிக அளவில் விற்பனையான நோக்கியா 3310 தற்போது பிரகாசமான நிறங்களுடன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

புதிய வடிவம் பெற்று வரவுள்ள நோக்கியா 3310 குறித்து பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் கண்காட்சியில் நோக்கியா நிறுவனத்தின் தலைமை இயக்குனர் ராஜிவ் சூரி கூறும்போது, “நோக்கியா 3310 பிராண்ட் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் காதல் மகத்தானது. இதன்மூலம் பல லட்சக்கணக்கான மக்களின் அன்பு கிடைத்திருக்கிறது” என்றார்.

புதிதாக மறுவடிவம் பெற்றுள்ள நோக்கியா 3310 உள்ள புதிய அம்சங்கள்

* மறுவடிவம் பெற்றுள்ள நோக்கியா 3310 பழைய வடிவத்தைக் காட்டிலும் பெரிய திரையை கொண்டுள்ளது.

* இதன் விலை 52 டாலர் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது (இந்திய விலைப்படி ரூபாய் 3,467 – மாற்றமிருக்கும்)

* புதிதாக வெளிவரவுள்ள நோக்கியா 3310 வெள்ளை, சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களில் வெளிவரவுள்ளது.

* பழைய நோக்கியா 3310 போனில் மிகவும் கவரப்பட்ட கைபேசிப் பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய பாம்பு விளையாட்டு நவீன காலத்துக்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

முன்னதாக கைபேசி உலகில் நோக்கியா முன்னணி நிறுவனமாகக் கொடிகட்டிப் பறந்தாலும், ஸ்மார்ட்ஃபோன்களின் வருகைக்குப் பிறகு நிலைமை மாறியது.

இதன் விளைவாக நோக்கியா முன்னணி இடத்தை இழந்து தடுமாறியதும், பின்னர் அதன் கைபேசி வர்த்தகத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியதும், ஒரு கட்டத்தில் அதன் தயாரிப்பை நிறுத்திக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply