shadow

மர வீடுகளை அமைக்க 45 நாட்கள் போதும்!

உலோகத்தைக் கண்டறியும் முன் மனிதனுக்குக் கண் கண்ட ஆயுதங்கள் என்றால் கல்லும் மரமும்தான். முழுவதும் மரத்தாலான வீடுகளை அமைத்து வாழ்ந்த நீண்ட கால வரலாற்றுக்கு உரியவர்கள் துருக்கியர்களும் சீனர்களுமே. துருக்கியில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான மர வீடுகளின் சிதைவுகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. உறைபனிப் பிரதேசங்கள், கடல் மட்டத்திலிருந்து உயரமான இடங்களில் இருக்கும் குளிர் பிரதேசங்களில் மரவீடுகளை அமைத்து வாழும் கலாச்சாரம் உலகம் முழுவதுமே காணப்படுகிறது. இந்தியாவில் காஷ்மீரிகள்தான் மரவீடுகளை அமைத்ததில் காலத்தால் முந்தியவர்கள்.

ரசனையும் அந்தஸ்தும்

பெரும்பாலான நாடுகளில் வாழிடத்தின் தட்பவெப்பச் சூழல்தான் மரவீடுகளை அமைத்து வாழும் வாழ்க்கை முறையைத் தீர்மானிக்கிறது. ஆனால், இந்தக் கலாச்சாரம் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மாறத் தொடங்கிவிட்டது. வெப்ப நாடுகள், மிதவெப்ப நாடுகளில் பணமிருப்பவர்கள் தங்களுக்கான வீட்டையும் கோடை வாசஸ்தல வீட்டையும் மரத்தால் அமைத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. கொரியா, சீனா, கனடா, துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து வாடிக்கையாளர்கள் விரும்பித் தேர்வு செய்யும் வகையில் ரெடிமேடாக உருவாக்கப்பட்ட (pre-fabricated wooden houses ) மரவீடுகளை இறக்குமதி செய்து அவற்றைப் பொருத்தித் தரும் பல நிறுவனங்கள் இந்தியாவில் வெற்றிகரமாகக் கடைவிரித்து லாபம் பார்த்து வருகின்றன.

கட்டுப்படியாகும் விலை

கான்கிரீட் வீடுகளில் கதவுகளையும் ஜன்னல்களையும் மரத்தால் அமைக்கவே பட்ஜெட்டில் 3% முதல் 5% வரை செலவிடவேண்டியிருக்கும் நிலையில் முழுவதும் மரத்தாலான வீடுகள் எப்படிச் சாத்தியம் என்று நடுத்தர மக்கள் வியந்துபோகலாம். ஆனால், இன்று கைக்கெட்டும் தூரத்தில் மரவீடுகளை இறக்குமதி செய்துவிடலாம் என்பதுதான் ஆச்சரியம். காண்க்ரீட் வீடுகளுக்கான பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது ரெடிமேட் மர வீடுகளை அமைக்க 30% முதல் 40% வரை மட்டுமே அதிக செலவு பிடிக்கலாம்.

இந்தியச் சூழ்நிலைக்கு ஏற்ப அடித்தளம் அமைக்க மட்டும் சிமெண்ட் பயன்படுத்துகிறார்கள். பெயிண்டிங் செலவுக்கு பதிலாக வுட் பாலீஷ் அடிக்க வேண்டிய செலவு மட்டும்தான். கான்கிரீட் வீடுகளைப் போல வீட்டைக் கட்டி முடிக்க வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. 1,500 சதுர அடி கொண்ட ஒரு ரெடிமேட் மர வீட்டை அமைக்க 45 நாட்கள் போதும்.

நவீன யுகத்தின் இன்றைய மரவீடுகள் (ACQ- Alkaline copper quaternary) எனப்படும் தொழில்நுட்பத்தில் மரங்களும் பலகைகளும் தண்ணீரில் ஊற வைக்கப்பட்டு, அழுத்தம் தரப்பட்டு அதன் பின்னரே கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஈரம், மழை, காற்று, பூச்சிகள் இந்த வீடுகளைத் தாக்க முடியாது என்பது மரவீடுகளை அமைக்க விரும்புகிறவர்களுக்குச் சாதகமான அம்சம். ஆனால், தீயை எதிர்த்து இந்த வீடுகளால் போராட முடியாது.

இயற்கையாக வாழலாம்

மாறிமாறி வரும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப வெப்பம், குளிர் இரண்டையுமே தக்கவைத்துக்கொள்ளும் ‘இயற்கையான கடத்தியாக’(natural insulator) மரவீடுகள் இயற்கையான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை நீலகிரி மலையில் கான்கிரீட் கட்டிடங்கள் அதிகரித்து வந்த நிலையில் அது சூழலியல் பிரச்சினையாக மாறியது.

தற்போது அரசும் தனியார் தொண்டு நிறுவனங்களும் ஏற்படுத்திவரும் விழிப்புணர்வுக்குப் பிறகு அங்கே மர வீடுகளை அமைப்பதில் தனியார் உல்லாச விடுதிகளை நடுத்துபவர்களும் உயர்தட்டு மக்களும் ஆர்வம் காட்டிவருகிறார்கள். உதகமண்டலம் அருகேயுள்ள இத்தலார், எல்லக்கண்டி, நஞ்சநாடு, பாலக்கொலா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக உருவாக்கப்பட்ட மரவீடுகள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துவருகின்றன. நிலகிரியில் மர வீடுகள் பெரும்பாலும் மஹாரஸ்டிர மாநிலத்திலிருந்தும் அந்தமானிலிருந்தும் தருவிக்கப்படும் காட்டுப் பலா மரங்களைக் கொண்டு அமைக்கப்படுகின்றன.

Leave a Reply