shadow

மன அழுத்தத்தில் ஐந்து கோடி இந்தியர்கள்!

இந்தியாவில் 2015-ம் ஆண்டில் மட்டும் 7,88,000 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் 2014-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் 40 நொடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். 2015ம் ஆண்டு எண்ணிக்கையின் படி, ஐந்து கோடி இந்தியர்கள் மன அழுத்தத்தில் இருந்திருக்கின்றனர்.

உலக சுகாதார நிறுவனம், 2015-ம் ஆண்டில் மட்டும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தற்கொலை செய்துகொண்டவர்கள் பற்றிய ஆய்வை உலக அளவில் நடத்தியது. இந்த ஆய்வில், தற்கொலை செய்துகொள்பவர்களில் 78 சதவிகிதம் பேர் ஏழை மற்றும் குறைந்த வருமானம்கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் மனஅழுத்தத்துக்கு ஆளாகின்றனர் எனத் தெரியவந்துள்ளது. உலக அளவில் 15-29 வயதைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்வதும் தெரியவந்துள்ளது.

Leave a Reply