shadow

மத்திய அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல்காந்தி

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி உடல்நலக்கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி காய்ச்சலால் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் ராகுல்காந்தி தனது டுவிட்டரில், ’அருண்ஜெட்லி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாகவும், கொள்கைகளின் அடிப்படையில் மோதிக் கொண்டாலும், அவர் விரைவில் நலம் பெற தனும், தனது காங்கிரஸ் கட்சியும் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ராகுல்காந்தியின் இந்த நாகரீக அரசியலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

 

Leave a Reply