shadow

மதுபான விலை உயர்வும், அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும் அறிவித்த அரசு

தமிழக அமைச்சரவை இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட இரண்டு முக்கிய முடிவுகள் அரசு ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு மற்றும் மதுபானங்களின் விலை உயர்வு. ஒரு வரவு ஒரு செலவு என்பதால் இரண்டுக்கும் சமமாகிவிடும் என்று கருதப்படுகிறது.

இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டாஸ்மாக் கடையில் பீர் ரூ.10ம், மதுபானம் குவார்ட்டருக்கு ரூ.12ம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வால் அரசுக்கு கூடுதலாக ரூ.5000 கோடி வருமானம் வரும் என்றும், ஊழியர்களுக்கான சம்பள உயர்வால் இதைவிட குறைவான செலவே வரும் என்பதால் அரசுக்கு மொத்தத்தில் வருவாயே என்று கூறப்படுகிறது

Leave a Reply