shadow

மதிப்புமிக்க பங்குகளை மலிவான விலையில் வாங்குவது எப்படி?

டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் டாடா ஈக்விட்டி பி/இ ஃபண்ட் கடந்த 13 வருடங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்துவருகிறது.தனது கேட்டகிரியில்
தொடர்ச்சியாக நல்ல வருமானத்தைக் கடந்த காலங்களில் ஈட்டித் தந்துள்ளதே நாம் பரிந்துரைக்கு இதனை எடுத்துக்கொள்ளக் காரணம். இந்த ஃபண்ட் தற்போது ரூ.2,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகளை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர் ஸோனம் உதாசி ஆவார்.

இந்த ஃபண்ட் தனது போர்ட்ஃபோலியோவில் உள்ள 70% பங்குகளின் பி/இ விகிதத்தை, சென்செக்ஸ் குறியீட்டின் பி/இ விகிதத்தைவிட குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்கிறது. இந்தச் சூட்சுமமே இந்த ஃபண்டின் தாரக மந்திர மாக உள்ளது. உதாரணத்துக்கு, சென்செக்ஸின் தற்போதைய பி/இ 24.85-ஆக உள்ளது. இந்த ஃபண்டின் தற்போதைய பி/இ 21.67-ஆக உள்ளது.

இது ஒரு வேல்யூ ஸ்டைல் ஃபண்டாகும். தரமான நிறுவனப் பங்குகள் மலிவான விலையில் கிடைக்கும்போது, தனது போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்வதுதான் இந்த ஃபண்டின் கொள்கை. 70 சதவிகிதத்துக்கும் குறைவான பி/இ உள்ள பங்குகளில் ஃபண்டின் முதலீடு சென்றுவிடுவதால், மீதமுள்ள 30 சதவிகிதத்தில் ஃபண்ட் மேனேஜராக அதிக பி/இ உள்ள பங்குகளிலோ அல்லது எழுந்துவரக்கூடிய நிறுவனப் பங்குகளிலோ முதலீடு செய்கிறார்.

பொதுவாக, தனது போர்ட்ஃபோலியோவில் 60% வெயிட்டேஜ், இந்தியாவில் உள்ள டாப் 150 நிறுவனப் பங்குகளுக்குச் செல்லும் படியும், மீதமுள்ளவை மிட் கேப் பங்குகளுக்குச் செல்லும் படியும் பார்த்துக்கொள்கிறது இந்த ஃபண்ட். தனது போர்ட் ஃபோலியோவில் இருக்கும் அனைத்துப் பங்குகளும் லிக்விட்-ஆக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது.

இதன் பீட்டா (1.01) சந்தையையொட்டியும், ஆல்ஃபா 11.31 என்ற அளவிலும் உள்ளது.

தற்சமயம் 97 சதவிகிதத்துக்கும் அதிகமாக, பங்குகளில் தனது முதலீட்டை வைத்துள்ளது. யெஸ் பேங்க், பவர் கிரிட், கெயில் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்கு களாக உள்ளன. ஃப்யூச்சர் ரீடெயில், எக்ஸைட், டாடா கெமிக்கல்ஸ், ரேமாண்ட் போன்ற மிட் அண்டு ஸ்மால் கேப் பங்குகளும் இதன் போர்ட்ஃபோலியோவில் இடம்பெற்றுள்ளன.

குரோத் ஆப்ஷன் மற்றும் டிவிடெண்ட் டிராக்கர் ஆப்ஷன் என இரு ஆப்ஷன் கள் உள்ளன. டிவிடெண்ட் டிராக்கர் ஆப்ஷனில், ஆப்ஷன் ‘ஏ’ மற்றும் ஆப்ஷன் ‘பி’ என இரு உள்வகைகள் உள்ளன. ஆப்ஷன் ‘ஏ’-வில், என்.ஏ.வி கடந்த காலாண்டில் டிவிடெண்ட் கொடுத்த திலிருந்து 5% அதிகரித்திருந்தால், புதிதாக டிவிடெண்ட் தரப்படும். அதுவே ஆப்ஷன் ‘பி’-யில் 10% அதிகரித்தால் புதிதாக டிவிடெண்ட் கொடுக்கப்படும். என் முதலீட்டுத் தொகை யிலிருந்து, டிவிடெண்ட் வரக் கூடாது என நினைப்பவர்களுக்கு இந்த டிராக்கர் ஆப்ஷன் கச்சிதமாகப் பொருந்தும். இதன் போர்ட் ஃபோலியோ ஃபைனான்ஸ், ஹெல்த்கேர் மற்றும் ஐ.டி துறையில் அண்டர் வெயிட்டாகவும், கெமிக்கல்ஸ், இன்ஜினீயரிங், கன்ஸ்ட்ரக் ஷன், சர்வீசஸ், எனர்ஜி, ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் ஓவர்வெயிட்டாக வும் உள்ளது.

2004-ம் ஆண்டில் ஃபண்ட் தொடங்கியபோது ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது 13,78,547 ரூபாயாக உள்ளது. இது சி.ஏ.ஜி.ஆர் அடிப்படையில் 21.60% ஆகும். பெரிய சந்தை உச்சத்தையும் (2007), பிறகு பெரிய வீழ்ச்சி யையும் (2008) கண்ட இந்த மல்ட்டி கேப் ஃபண்டுக்கு, இது ஓர் உன்னதமான வருமான மாகும். இந்த ஃபண்டின் எஸ்.ஐ.பி வருமானமும் கடந்த காலகட்டங்களில் மிகவும் அற்புதமாக இருந்துள்ளது.

சந்தையைவிட சிறிதளவு அதிக ரிஸ்க் எடுக்க விரும்புபவர் கள், லார்ஜ் கேப், ஸ்மால் அண்டு மிட் கேப் எனப் பிரித்து முதலீடு செய்ய விரும்பாதவர் கள், நடுத்தர கால (5 ஆண்டுகள்) நோக்கங்களுக்காக முதலீடு செய்ய விரும்புபவர்கள், டிவிடெண்ட் ட்ரிகர் ஆப்ஷனை எதிர்பார்ப்பவர்கள் என அனைவரும் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்

Leave a Reply