shadow

மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

காக்கா முட்டை, தர்மதுரை, ஆறாது சினம், கட்டப்பாவை காணோம் உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல்முதலாக மணிரத்னம் படத்தில் நடிக்கவுள்ளார்.

‘காற்று வெளியிடை’ படத்திற்கு அடுத்து மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய்சேதுபதி, துல்கர் சல்மான், சாரா அலிகான், ஜோதிகா ஆகியோர் நடிக்கவுள்ள நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்துள்ளார்.

இந்த படத்தில் நான்கு ஹீரோக்கள், நான்கு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தில் நடிப்பவர்கள் குறித்து புதிய தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply