மட்டமாக விமர்சனம் செய்கிறார் கவுதம் காம்பீர்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

கிழக்கு டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் அதிஷியும், பாஜக சார்பில் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரும் நேருக்கு நேராக போட்டியிட்டு வரும் நிலையில் இருவரும் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தன் மீது மட்டமான விமர்சனங்களை கவுதம் காம்பீர் வைப்பதாக அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார். கவுதம் கம்பீர் என் மீது அவதூறு பரப்புகிறார் என்றும், மட்டமான வாசகங்களுடன் துண்டு பிரசுரங்களை வினியோகிப்பதாகவும் அதிஷி குற்றச்சாட்டியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை கவுதம் காம்பீர் தரப்பினர் மறுத்துள்ளனர்.

 

Leave a Reply