மக்கள் நீதி மய்யத்தில் கூட்டணி சேர்ந்த இந்திய குடியரசு கட்சி

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில், இந்திய குடியரசு கட்சிக்கு, ஒரு மக்களவைத் தொகுதியும், 3 சட்டப்பேரவைத் தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் கட்சியின் தலைமை அலுவலகத்தில், இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசனுடன் ஆலோசனை நடத்திய கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் இதனை உறுதி செய்தார்.

இதுகுறித்து இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் கூறுகையில், ஒரு மக்களவைத் தொகுதியும், மூன்று சட்டமன்ற தொகுதிகளையும், மக்கள் நீதி மய்யம் தங்களுக்கு ஒதுங்கியிருப்பதாகவும், இந்த தொகுதிகளில் மக்கள் நீதி மய்யத்தின், பேட்டரி டார்ச் சின்னத்திலேயே போட்டியிட உள்ளதாகவும் கூறினார்.

Leave a Reply