மகாராஷ்டிரா அரசியல்: நேற்று வரை இவங்க யாருமே ஒண்ணுமே சொல்லலையே!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று இரவு வரை சிவசேனா தலைமையிலான ஆட்சி அமையும் என்றும் அந்த ஆட்சிக்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும் என்றுதான் கூறப்பட்டது. நேற்று இரவு அனைத்து தொலைக்காட்சிகளிலும் இதுகுறித்த விவாதமே நடந்தது

இந்த நிலையில் இரவோடு இரவாக என்ன நடந்தது என்றே தெரியவில்லை. திடீரென பாஜக தலைமையிலான அரசுக்கு ஆதரவு கொடுக்க போவதாக சரத்பவார் கூறியதை அடுத்து இன்று காலை பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. இந்த திடீர் திருப்பத்தை தமிழக அரசியல்வாதிகள் பலர் விமர்சனம் செய்துள்ளனர். குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராம்தாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்பட பலர் இதுகுறித்து தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர்

மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவுடன் இணைந்து ஆட்சியமைத்தது பாரதிய ஜனதா. காலை நாளிதழ் செய்திகளில் சிவசேனா ஆட்சி. காலை தொலைக்காட்சி செய்திகளில் பாஜக ஆட்சி. மராட்டியத்தில் சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி’ என்று டாக்டர் ராம்தாஸ் தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார்

அதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து கூறிய போது ஜனநாயகத்தின் மீது கேள்விக்குறி எழுந்துள்ளது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்

எதிரெதிர் அணியில் தேர்தலில் போட்டியிட்டு தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பது மக்களின் முடிவுக்கு எதிரானது என்று நேற்றுவரை சிவசேனா கட்சியின் மீது அதற்கு ஆதரவு கொடுக்க முன்வந்த காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் குறித்தும் எந்த விமர்சனமும் செய்யாத தமிழக அரசியல்வாதிகள் தற்போது மட்டும் விமர்சனம் செய்வது சரிதானா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply