மகாசிவராத்திரி கொண்டாட்டம்: நாடு முழுவதும் திரண்ட பக்தர்கள்

ஒவ்வொரு வருடமும் சிவபக்தர்கள் மகாசிவராத்திரியை பக்தி மயத்தோடு கொண்டாடி வரும் நிலையில் நேற்றைய மகாசிவராத்திரி கொண்டாட்டமும் நாடு முழுவதும் சிறப்பாக நடந்தது. குறிப்பாக நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் வருகை தந்து சிவனை வழிபட்டன.ர்

வாரணாசி: இந்த நகரத்தில் உள்ள லட்சக்கணக்கான சிவபக்தர்கள் பக்தர்கள், கங்கையில் புனித நீராடினர். பின்னர், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து காசி விஸ்வநாதரை வழிபட்டனர். கங்கை கரையில் இருந்து கோயில் நோக்கி வந்த ஒரு சில பக்தர்கள் குழு, உடுக்கை அடித்தபடியும், பாரம்பரிய இசை கருவிகளை வாசித்தபடியும் சென்றனர்.

டெல்லி: தலைநகரில் உள்ள கவுரி சங்கர் ஆலயம் உள்ளிட்ட சிவன் கோயில்களில், மகா சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்தனர்.

லூதியானா: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்த கோயிலில், சிவராத்திரி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், சர்பம் மற்றும் நந்திக்கு பால், வில்வ இலை அபிஷேகம் செய்தனர்.

உஜ்ஜைன்: மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயில் சிவலிங்கத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க திருநீறு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை: கபாலீஸ்வரர், நங்காநல்லூரில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் உள்பட சென்னையில் உள்ள பல சிவாலயங்களில் நேற்று பக்தர்கள் கூட சிவனை மனமுருக வழிபட்டனர்.

Leave a Reply