shadow

ப்ளிப் போன் தயாரிக்கும் சாம்சங்: இணையத்தில் லீக் ஆன புதிய தகவல்கள்

சர்வதேச சந்தையில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை முன்னணியில் இருக்கும் நிலையில், சாம்சங் நிறுவனம் புதிய ப்ளிப் போன் ஒன்றை தயாரித்து வருகிறது. சீன இணையத்தளம் ஒன்றில் SM-G1650 பெயரில் சாம்சங் ப்ளிப் போன் சார்ந்த தகவல்கள் கசிந்துள்ளது. ஏற்கனவே இதே பெயரில் ப்ளிப் போனின் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய சாம்சங் ப்ளிப் போன் சாம்சங் கேலக்ஸி ஃபோல்டர் 2 என அழைக்கப்படும் என்றும் கருப்பு நிறத்தில் கோல்டு நிற கீபேட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஹோம் பட்டன், பேக் பட்டன்கள் மட்டுமின்றி கேமரா, மின்னஞ்சல் மற்றும் மெசேஜிங் அம்சங்களுக்கு ஷார்ட்கட் பட்டன்களும் இடம்பெறும்.

சிறப்பம்சங்களை பொருத்த வரை 3.8 இன்ச், 800×480 பிக்சல் டிஸ்ப்ளே, குவாட்கோர் சிப்செட், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரண்டு மாடல்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா, 1950 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 மற்றும் மேம்படுத்தப்பட்ட நோட் 7 ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ் 3 இந்தியாவில் வெளியிடப்பட்டது.

Leave a Reply