shadow

போதுமான தண்ணீர் அருந்துகிறோமா? சம்மர் சமாளிக்க உதவும் “ஆப்ஸ்” கணக்குப் பிள்ளை! #UsefulApps

கிரிக்கெட் பார்ப்பதில் தொடங்கி டீ குடிக்கும் செலவு கணக்கு வரை ஃபாலோ செய்ய மொபைலில் பல ஆப்ஸ் வைத்திருக்கிறோம். நமக்குத் தேவையான, ஹெல்த் டிப்ஸ் வழங்கும் ஆப்ஸ் எத்தனை வைத்திருக்கிறோம்? சில பரிந்துரைகள் இங்கே…

ஒருநாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்துகிறோம். எவ்வளவு தண்ணீர் இன்னும் அருந்த வேண்டும் என்பதை காட்டுகிறது இந்த வாட்டர்லாக்குடு ஆப். இந்த ஆப்பில் நாம் திரவமாக நாம் அருந்தும் அனைத்து பொருள்களின் அளவை பதிவு செய்தால் இன்று எவ்வளவு தண்ணீர் அருந்தியிருக்கிறோம் என்பதையும். இன்னமும் இந்த நாள் முடிவதற்குள் எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்பதையும் காட்டும். மேலும் தண்ணீர் குடித்து அதிக நேரம் ஆகிவிட்டது என்பதையும் நினைவுபடுத்துகிறது இந்த ஆப். தினசரி மற்றும் சரியான இடைவெளிகளில் ரிமைண்ட் செய்யும் இந்த ஆப் ஐ-ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கிறது. இலவச ஆப்பாக ஆப்பிள் ஸ்டோரில் இருக்கும் இந்த ஆப் ஐஒஎஸ் 9 இயங்குதளம் வரை சப்போர்ட் செய்யும்.

லைஃப்சம்

உடல்நிலையை பற்றிய விழிப்புஉணர்வை அளிக்கும் மிகச் சிறந்த ஆப். ஒருவர் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும். என்ன சாப்பிட வேண்டும் அது உடலுக்கு நல்லதா என தகவல்களைத் தொடர்ந்து தரும். சிறந்த டயட்களை பரிந்துரைக்கும். தொடர்ந்து நமது ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. உடலின் தண்ணீர் மற்றும் உணவின் தேவையை உணர்த்துவது மட்டுமல்லாமல் உடற்பயிற்சிகள் குறித்தும் தகவல்களைத் தருகிறது. இந்த ஆப், கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.3 ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதன் மூலம் நமது உடல் நலம் பற்றிய தகவல்களை சமூக வலைதளங்களில் பகிரும் வசதியும் உள்ளது.

ஃபுட்டுகேட்

உணவு பற்றிய விழிப்புஉணர்வு அளிக்கும் ஆப் இது. உடல் எடையை எப்படி குறைப்பது, எந்த உணவு சாப்பிட்டால் எவ்வளவு எடை குறையும், எந்த உணவு சாப்பிட்டால் என்ன பயன் என்பது குறித்த விவரங்களையும், கலோரி எண்ணிக்கை மற்றும் அதன் பயன்களையும் கொடுக்கிறது. 2,50,000 உணவு பொருட்களை ஏ, பி, சி, டி என தரம் பிரித்து அளிக்கிறது. ரெசிப்பிக்களையும் வழங்கும் இந்த ஆப்பின் ப்ளே ஸ்டோர் ரேட்டிங் 4.3. இந்த ஆப் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் தளங்களில் கிடைக்கிறது. 50 லட்சம் பேர் இந்த ஆப்பை பயன்படுத்துகின்றனர்.

ஸ்ட்ராவா

ஸ்ட்ராவா இன்றைய ஃபிட்னெஸ் ஆப்ஸ்களில் அதிக நம்பகத்தன்மை வாய்ந்தது. சைக்கிளிங், ரன்னிங் போன்ற நாம் செய்யும் பயிற்சிகளை ட்ராக் செய்து காட்டும் இந்த ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. 10 மில்லியன் நபர்களால் பயன்படுத்தப்படும் இந்த ஆப்ஸில் எவ்வளவு வேகத்தில் சைக்கிள் ஓட்டியுள்ளோம். சராசரி வேகம் என்ன? எத்தனை கலோரி குறைந்துள்ளது என்ற துல்லியமான தகவல்களைத் தரும். இந்த தகவல்களை சமூக வலைதளங்களில் பகிரவும் முடியும். மேலும் நண்பர்களுடன் இணைந்து கூட்டாக ஃபிட்னெஸ் ட்ராக் செய்யவும் இந்த ஆப் உதவுகிறது. பெரும்பாலான சைக்கிளிங் க்ளப்களின் விருப்ப பட்டியலில் இந்த ஆப் இருப்பது இதன் பலம். குறைந்த அளவு மெமரியை எடுத்துக் கொள்வதால் பயன்பாட்டாளர்களின் மொபைலில் இதற்குத் தனி இடம். இதன் பேசிக் வெர்ஷன் இலவசமாகவும், ப்ரீமியம் வெர்ஷன் கட்டணத்திலும் கிடைக்கிறது.

Leave a Reply