போட்டியிடக்கூடாது என மிரட்டினார்களா? நாசர் விளக்கம்

நடிகர் சங்க தேர்தலில் தான் போட்டியிட கூடாது என யாரும் என்னை மிரட்டவில்லை என நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கம் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் நேற்று விஷாலின் பாண்டவர் அணியை சேர்ந்த வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த அணிக்கு எதிராக ஐசரி கணேஷின் அணி போட்டியிடவுள்ளது.

இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட கூடாது என நாசர் உள்பட பாண்டவர் அணிக்கு மிரட்டல் வந்ததாக கூறப்பட்டது. ஆனால் இதனை நாசர் மறுத்து, ‘எங்களை யாரும் மிரட்டவில்லை என்று கூறினார்

Leave a Reply