போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத கட்டணம் குறைக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

போக்குவரத்து விதிமீறலுக்கான புதிய அபராத கட்டணம் குறைக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடன் ஆலோசிக்கப்படும் என்றும், முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின்னர் அபராத தொகை குறைக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ‘மாநில அரசுகள் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத கட்டணத்தை தேவப்பட்டால் குறைத்து கொள்ளலாம் என தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். புதிய அபராத கட்டணம் தமிழகத்தில் இன்னும் அமல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply