பொருளாதார மந்த நிலை: ஒரே நாளில் 2.5 லட்சம் கோடி இழப்பு


பொருளாதார மந்த நிலையால், நேற்று ஒரு நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மும்பை பங்குச்சந்தை 770 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 225 புள்ளிகளும் சரிந்ததால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த 11 மாதங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு இது என்றும், இதன் காரணமாக பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் இனி முதலீடு செய்வதற்கு ரொம்பவே யோசிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது

மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளும் சரிவை சந்தித்து வருவதும் பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது

Leave a Reply