shadow

பொன்னாங்கன்னி கீரை சாம்பார் செய்வது எப்படி?

பொன்னாங்கண்ணி கீரை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இன்று பொன்னாங்கண்ணி கீரையை வைத்து சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
உடலுக்கு குளிர்ச்சி தரும் பொன்னாங்கண்ணி கீரை சாம்பார்
தேவையான பொருட்கள் :

பொன்னாங்கண்ணி கீரை – 1 கட்டு
தக்காளி – 2
பாசிப்பருப்பு – 1 கப்

தாளிக்க :

எண்ணெய் – தேவையான அளவு
கடுகு
உளுந்தம் பருப்பு
சீரகம்
வெங்காயம் – 1

பொடி வகைகள் :

சீரக பொடி – 2 தேக்கரண்டி
மிளகாய் பொடி – 2தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாசிப்பருப்பை சீரக தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைத்துக்கொள்ளவும்.

வேக வைத்த பருப்புடன் தக்காளியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

அடுத்து அதில் நறுக்கிய கீரை, சிறிது தண்ணீர், உப்பு, மிளகாய் தூளையும் சேர்த்து வேக விடவும்.

கீரை முக்கால் பதம் வெந்தவுடன் இறக்கி வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கீரை சாம்பாரில் கொட்டி 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

சூப்பரான சத்தான கீரை சாம்பார் ரெடி.

Leave a Reply