shadow

பொங்கல் ரேசில் இருந்து பின்வாங்குகிறதா விக்ரமின் ஸ்கெட்ச்

வரும் பொங்கல் தினத்தில் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் சண்முகப்பாண்டியனின் ‘மதுரவீரன்’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்ட நிலையில் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ செய்தி இன்னும் வெளியாகவில்லை

இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது டுவிட்டரில் ‘ஸ்கெட்ச்’ திரைப்படம் ஜனவரியில் ரிலீஸ் ஆகும் என்று பதிவு செய்துள்ளதால் பொங்கல் அல்லது குடியரசு தின விடுமுறை ஆகிய இரண்டில் ஒன்றில் வெளியாகும் என தெரிகிறது

ஜனவரி 26ல் விஷாலின் ‘இரும்புத்திரை’ வெளியாகவுள்ளதால் அனேகமாக விஷாலுடன் விக்ரம் இந்த முறை மோதுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply