தேவையானவை:

மைதா – ஒரு கப், சோள மாவு – ஒரு கப், பால் – அரை லிட்டர், பால் பவுடர் – கால் கப், கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் – ஒன்றரை கப், பொடித்த வெல்லம் – 2 கப், முந்திரி – திராட்சை – ஒரு கைப்பிடி அளவு, தேங்காய் துருவல் – கால் கப், ஏலக்காய்த்தூள், நெய், உப்பு – சிறிதளவு, வாழை இலை – தேவையான அளவு.

செய்முறை:

பாலை நன்கு காய்ச்சி, ஆற வைத்து… மைதா, சோள மாவு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். மேல் மாவு தயார். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். பேரீச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் தேங்காய் துருவல், பால் பவுடர், முந்திரி – திராட்சை, பொடித்த வெல் லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து வாணலி யில் லேசாக புரட்டவும். பூரணம் தயார்.

நறுக்கிய வாழை இலையை ஒரு தட்டில் வைத்து மாவுக் கலவையை விட்டு, நடுவில் பூரணத்தை வைத்து, இலையின் மறுபாதியால் மூடி ஆவியில் வேக வைக்கவும்.

Leave a Reply