shadow

பேராசிரியர் அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி: ஸ்டாலின் நலம் விசாரிப்பு

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களுக்கு இன்று அதிகாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அன்பழகன் உடல்நிலை குறித்து தகவல் அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று க.அன்பழகனிடம் நலம் விசாரித்தார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்களும் உடனிருந்தார்.

பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் உடல்நலம் குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தூம் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விரைவில் அறிக்கை வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply