பேய் இருந்தா அதோட அட்ரஸ் கொடு: நயன்தாராவிடம் கேள்வி கேட்ட புளுசட்டை மாறன்

இயக்குனர் சர்ஜூன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘ஐரா’ திரைப்படம் மார்ச் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ‘ஜிந்தாகோ’ என்ற புரமோ பாடல் இன்று வெளியானது.

இந்த புரமோஷன் வீடியோ 46 வினாடிகள் மட்டுமே உள்ள நிலையில் இந்த வீடியோவில் புளூசட்டை மாறன் கிட்டத்தட்ட 10 வினாடிகள் வந்து வசனம் பேசியுள்ளார். அதில் அவர் ‘ஐரா’ படத்தை விமர்சனம் செய்வது போன்றே நடித்துள்ளார். குறிப்பாக ஒரு காட்சியில் ‘பேய் இருக்குன்னு சொல்றில்ல, அதோட அட்ரஸ்’ கொடு’ என்று கூறும் காட்சி அனைவராலும் ரசித்து பார்க்கப்பட்டது.

நயன்தாரா , கலையரசன், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கேஎஸ் சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ளார்.

Leave a Reply