கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பெரம்பலூரில் டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவை பல ஆண்டுகள் பழமையானது என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது திருச்சி அருங்காட்சியக காப்பாளர் சிவக்குமார் அவர்கள் இதுகுறித்து கூறியபோது பெரம்பலூர் குன்னம் ஏரியல் கண்டறியப்பட்ட ராட்சச உருண்டைகள் டைனோசர் முட்டை இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்

நத்தை போன்ற கடல் உயிரினங்களின் படிமங்கள் மீது அமோனியம் படிவதே இது போன்ற பாறைகள் ஏற்பட காரணம் என்று அவர் கூறியுள்ளார்

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர் முட்டை பெரம்பலூரில் கிடைத்ததாக வெளிவந்த பரபரப்பான தகவலை அடுத்து தற்போது அவை டைனோசர் முட்டை இல்லை என்ற தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply