shadow

பெண்கள் தனித்துச் செயல்பட வேண்டும்
15
உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு ஐம்பது சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாகக் கடந்த ஜூன் 19-ம் தேதி வெளியான ‘அதிகாரத்தைப் பொதுவில் வைப்போம்’ என்ற கட்டுரையைப் படித்தேன். பெரும்பாலான இடங்களில் ஆண்களே பெண்களின் பெயரால் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

பதினேழு ஆண்டுகளுக்கு முன் உள்ளாட்சியில் மாவட்ட ஊராட்சி மன்றம் ஏற்பட்ட போது தருமபுரி கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் முதல் மாவட்ட ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னோடு சேர்த்து 41 உறுப்பினர்கள், அதில் 10 பேர் பெண்கள். ஆனால் முதல் கூட்டத் தொடரில் கலந்துகொண்டவர்கள் சுமார் 55 பேர்! உறுப்பினர் எண்ணிக்கையைவிட 14 பேர் அதிகம். பெண் உறுப்பினர்களின் கணவர், சகோதரர்கள் மற்றும் அவர்களுக்கு வேண்டிய உறவினர்கள்தான் அவர்கள். முதல் கூட்டம் என்பதால் நான் எதுவும் சொல்லவில்லை.

இரண்டாவது கூட்டம் ஏற்பாடானது. அந்தக் கூட்டத்தில் வந்திருந்த அனைவரையும் அழைத்து, பெண் உறுப்பினர்களின் முக்கியத்துவத்தை விளக்கிச் சொன்னேன். அன்றிலிருந்து நான் பதவியில் இருந்த ஐந்து ஆண்டுகளில் ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் பெண் உறுப்பினர்களின் பங்களிப்பு ஆக்கபூர்வமான முறையில் அமைந்தது. பெண்களின் அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளாமல் அவர்கள் வீட்டு ஆண்கள் அவர்களைத் தனித்துச் செயல்பட விட வேண்டும்.

Leave a Reply