பெங்களூரு அணியில் இருந்து வெளியேறும் ஸ்டெயின்: காயம் காரணமா?

தோள்பட்டை காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின் விலகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் பெங்களூரு அணியில் இடம் பெற்று நன்றாக விளையாடி வந்தார். அவரது பந்துவீச்சு அனல்பறந்ததால் பெங்களூரு அணிக்கு அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள் கிடைத்தது

இந்த நிலையில் ஸ்டெயின் தோள்பட்டை வலியால் அவதிப்படுவதாகவும் இதனால் அவர் தென்னாப்பிரிக்கா திரும்புவதாகவும் பெங்களூரு அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply