பெங்களூரு அணிக்கு 4வது தோல்வி: என்ன ஆச்சு விராத் கோஹ்லிக்கு?

விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்த நிலையில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் தோல்வி அடைந்து 4வது தோல்வியை தழுவியுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக பல வெற்றிகளை பெற்றுத்தந்த விராத் கோஹ்லிக்கு என்ன ஆச்சு? என பெங்களூரு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நேற்றைய போட்டியில் கோபால் பந்து வீச்சு மற்றும் பட்லர், திரிபதியின் பேட்டிங் காரணமாக ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

பெங்களூரு அணி: 158/4 20 ஓவர்கள்

பார்த்தீவ் பட்டேல்: 67 ரன்கள்
ஸ்டோனிஸ்: 31 ரன்கள்
விராத் கோஹ்லி: 23 ரன்கள்

ராஜஸ்தான் அணி: 164/3

பட்லர்: 59 ரன்கள்
ஸ்மித்: 38 ரன்கள்
திரிபதி: 34 ரன்கள்

ஆட்டநாயகன்: கோபால் (3 விக்கெட்டுக்கள்)

மும்பையில் நடைபெறவுள்ள இன்றைய போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளன

Leave a Reply