shadow

பூமிக்கடியில் கட்டபட்ட கோயில்..ஆண்டு முழுவதும் தண்ணீரில் மூழ்கியிருக்கும் அதிசயம்! :

காஞ்சி-அய்யங்கார்குளம் ஆஞ்சநேயர் கோயில் வியப்பின் சரித்திர குறியீடு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அய்யங்கார்குளம் என்ற ஊரில் தான் இந்த அதிசயம்.

இந்த ஊரிலிருக்கும் பிரபலமான, கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மிகப் பழமையான ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலுக்கு முன்னால் இருக்கும் குளக்கரையின் வடக்குப் பகுதியில் வாவிக் கிணறு ஒன்று உள்ளது.

மிக அற்புதமான கலை அம்சம் நிறைந்த வேலைப்பாடுகளுடன் கூடிய பெருமாள் கோயில் பூமிக்கடியில் உருவாக்கப் பட்டு, அதற்குள் அழகிய மண்டபமும், அதன் நடுவே கிணறு ஒன்றும் உள்ளது. இந்தக் கிணற்றில் உள்ள ஊற்று வருடம் முழுவதும் பெருக்கெடுத்து வருகிறது. அதனால் இந்தக் கோயில் எப்போதும் தண்ணீராலேயே நிரம்பிக் காணப் படுகிறது.

சித்ரா பௌர்ணமித் திருவிழாவிற்காக இந்த தண்ணீரை மோட்டார் இயந்திரம் மூலம் வெளியேற்றி விடுவார்கள். விழா நாளில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் உற்சவராக வருவார். அவர் பல்லக்கில் வந்து இந்த வாவிக் கிணற்றுக்குள் இருக்கும் மண்டபத்திற்குள் எழுந்தருள்கிறார்.

லட்சக் கணக்கான மக்கள் இந்த அதிசயக் கிணற்றுக் கோயிலின் திருவிழாவிற்காக வருகிறார்கள். விழா முடிந்து ஒரு வாரம் கழித்து மீண்டும் தண்ணீர் நிரம்பத் துவங்கி விடும். இந்த நீரை முறையாகப் பாசனத்திற்கு ஏற்றம் மூலம் இறைத்துப் பயன் படுத்துகிறார்கள்.

இன்னொரு அதிசயமும் இந்தக் கோயிலுக்கு உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயிலில் இருந்த உற்சவர் ஐம்பொன்னால் செய்யப் பட்ட ஆஞ்சநேயர் சிலை திருடு போய் விட்டது. ஊர் மக்கள் போலிசில் புகார் கொடுத்துள்ளனர். சிலையை எடுத்துச் சென்ற திருடர்களால் அந்த சிலையை வெகு தூரம் கொண்டு செல்ல இயலவில்லை.

எனவே ஒரு குளத்தில் அந்த சிலையைப் போட்டு விட்டுச் சென்றுள்ளனர். பின்னர் இந்த சிலை கண்டெடுக்கப் பட்டு மீண்டும் இந்தக் கோயிலுக்கே வழங்கப் பட்டது. இது இங்குள்ள ஆஞ்சநேயரின் மகிமையாக இந்த ஊர் மக்கள் கருதுகிறார்கள்.

மேலும் கருவரையைச் சுற்றி வரும் போது, தவழ்ந்து தான் செல்ல முடியும். அதற்காகவே குறுகலாகப் பாதையை அமைத்துள்ளார்கள்

//www.facebook.com/100009181530933/videos/1968801636769202/

Leave a Reply