பூனைக்குட்டி விரைவில் வெளியே வரும்: தங்கத்தமிழ்ச்செல்வன் குறித்து வெற்றிவேல்!


தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் தினகரன் விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து அமமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் கூறியதாவது:

தங்க தமிழ்ச்செல்வன் புத்தி பேதலித்தது போல் பேசுகிறார். இவரைப் பற்றி டிடிவி தினகரனிடம் ஏராளமான குற்றச்சாட்டுகளை ஏற்கெனெவே முன் வைத்தேன். அமமுக கட்சி மீது நம்பிக்கை இல்லையென்றால் கிளம்பி விடுங்கள் என பலமுறை அவரிடம் கூறியிருக்கிறேன். அவருடைய இந்த மாற்றத்துக்கு காரணம் பணம் தான்.

மற்ற கட்சியில் இருந்து யார் யார் அவரை வந்து சந்திக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். பூனைக்குட்டி விரைவில் வெளியே வரும். அவரால் நிறைய தடவை இதுபோன்ற பிரச்சனைகள் வந்திருக்கிறது. மைக்கை பார்த்தாலே அவரது இஷ்டத்துக்கு பேச ஆரம்பித்து விடுகிறார். அவரை அழைத்து எச்சரிக்கை விடுத்தும் பயனில்லை. கட்சி விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அமமுக மற்றும் அதன் பொதுச்செயலாலரை அவமானப்படுத்துவது தான் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை’

இவ்வாறு வெற்றிவேல் கூறினார்

Leave a Reply