shadow

download-4-1

பழங்காலம் முதல் இன்று வரை உணவில் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க பயன்படுத்தப்படும் ஓர் மருத்துவ குணம் வாய்ந்த பொருள் தான் பூண்டு. இந்த பூண்டில் அயோடின், சல்பர், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, இதில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையும் வளமாக உள்ளது.

பூண்டு ஆஸ்துமா பிரச்சனைக்கு நல்ல சிகிச்சையளிக்கும். உங்களுக்கு ஆஸ்துமா பிரச்சனை இருப்பின், தினமும் 1-2 பச்சை பூண்டை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் பூண்டில் உள்ள வைட்டமின் சி, மூச்சுக்குழாயை சுருங்கச் செய்யும் ப்ரீ-ராடிக்கல்களை நீர்க்கச் செய்து, மூச்சுவிடுவதில் உள்ள சிரமத்தைக் குறைக்கும்.

தினமும் பூண்டை சாப்பிட்டு வந்தால், உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு சீராகப் பராமரிக்கப்பட்டு, எலும்புத் தேய்மானம் அடைவது தடுக்கப்படும்.

பூண்டு தமனிகளின் நெகிழ்வுத்தன்மையை சீராகப் பராமரிக்க உதவும். மேலும் இது ப்ரீ-ராடிக்கல்களால் இதயம் பாதிக்கப்படுவதைத் தடுக்க உதவி புரியும். அதுமட்டுமின்றி, இதில் உள்ள சல்பர் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதைத் தடுத்து, இதயத்தில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளும்.

தினமும் உணவில் பூண்டை சேர்த்து வந்தால், சளி மற்றும் இதர பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம். குறிப்பாக இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை தொண்டையில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீவிரமாகாமல் குறைக்கும். முக்கியமாக நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சியின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும்.

பூண்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்யும். எனவே உங்களை நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க விரும்பினால் அன்றாட உணவில் பூண்டை சேர்த்து வாருங்கள்.
ஆய்வு ஒன்றில் தினமும் பூண்டை உணவில் சேர்த்து வருவோருக்கு 9-12 சதவீதம் கொலஸ்ட்ரால் குறைவது தெரிய வந்துள்ளது. எனவே உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பின், பூண்டை தினமும் உணவில் சேர்த்து வாருங்கள்.

Leave a Reply